×

கள்ளக்குறிச்சி-வேப்பூர் சாலையில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

தியாகதுருகம், நவ. 7: கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் முடியனூர் அருகே பட்டுப்போன புளிய மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.இந்த சாலையில்  சுமார் 50க்கும் மேற்பட்ட புளிய  மரங்கள் காய்ந்து பட்டுபோய்  உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன.  இந்த சாலையில் நாள்தோறும்  பள்ளி, கல்லூரி   மாணவ , மாணவிகளும் வேலைக்குசெல்லும்  கூலி  தொழிலாளர்களும்  சைக்கிள்,மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதி திருச்சி மெயின்ரோட்டில் உள்ளதால் பேருந்துகள், சொகுசு வாகனங்கள், ஆட்டோ  போன்ற வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.போக்குவரத்து  நேரங்களில் அபாய நிலையில் உள்ள இந்த  மரங்கள் உடைந்து விழும் நிலை  ஏற்பட்டால் பெரும்விபத்து ஏற்படுவதுடன், உயிர் சேதமும் ஏற்பட  வாய்ப்புள்ளது. இந்த மரம் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து  விழும் நிலையில் உள்ளதால் அதனை அகற்ற நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.




Tags : accident ,road ,Kallakurichi-Vepur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...