×

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, நவ.7:  கிருஷ்ணகிரியில் நாளை (8ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (8ம் தேதி) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் பங்கேற்கலாம். தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் அனைத்து கல்வி சான்றுகளின் நகல்களுடன், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதனால் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Krishnagiri ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி