×

கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.7: கிருஷ்ணகிரியில் தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்க செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சின்னசாமி, அனுமந்தன், சுப்பிரமணி, அசோக்குமார், ரகு, கோவிந்தன், முருகன், சக்தி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா வரவேற்றார்.  இதில் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கரும்புக்கு விலை கேட்டு, கரும்பு நடவு நிறுத்த போராட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு 10 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இந்த ஆலை ஒரு ஆண்டில் 4 லட்சம் டன் அரைக்கும் திறன் கொண்டது.

தமிழ்நாட்டிலேயே 12 சதவீத சர்க்கரை சத்தை கொடுக்க கூடிய கரும்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் தான் விளைகிறது. மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கு டன்னுக்கு ₹6 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், பாலக்கோடு சர்க்கரை ஆலையின் கோட்ட அலுவலகங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 இடங்களில் இயங்கி வந்தது. தற்போது அவை ஒன்றுகூட செயல்பாட்டில் இல்லை. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் நசீர் அகமது, அனுமந்தராஜ், கிருஷ்ணன், குப்பையன், பூபதி, சண்முகம், வேலு, வேலுமணி, வெங்கடேசன், கணேசன், ராஜேந்திரன், பெருமா, மணிமேகலை, ஜோதிகண்ணன், ராமசாமி, ஜெய்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.

Tags : Sugarcane Manufacturers Association Advisory Meeting ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்