×

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

நெய்வேலி, நவ. 7: வடலூர் அடுத்துள்ள ராசாகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார் (37). திருமணம் ஆகாதவர். கடந்த  நாடாளுமன்றத் தேர்தலின்போது  பணம் பிரிப்பது தொடர்பாக அதே பகுதியைச்  சேர்ந்த தேமுதிக கிளை செயலர் செந்தில்குமாரை சந்தோஷ் குமார் சுத்தியால்  அடித்து கொலை செய்துள்ளார். இந்த  கொலை வழக்கில் சிறையில் இருந்த  சந்தோஷ்குமார் கடந்த  மாதம்  வெளியே வந்தார். தினந்தோறும் வடலூர் காவல்  நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.  இந்நிலையில் சந்தோஷ்குமார்  குடும்பத்தினரும், அவரது உறவினரும் யாரும் இவரிடம் போசமல் இருந்தனர். இதனால் விரக்தி அடைந்தவர்  வீட்டின் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டாராம். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags : murder ,suicide ,
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை