×

அதிமுக ஆலோசனை கூட்டம்

காரிமங்கலம், நவ.7: காரிமங்கலத்தில் அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாம் அதே உற்சாகத்தோடு, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனக் கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், காரிமங்கலம்  ஒன்றிய செயலாளர்கள் குமார், செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து மண்டல தலைவர் சிவம், முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர் காவேரி, மாது, கூட்டுறவு வங்கி தலைவர்கள் செந்தில் குமார், சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Intellectual Advisory Meeting ,
× RELATED அதிமுக ஆலோசனை கூட்டம்