×

தாட்கோ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்ட தாட்கோ மூலம் நலத்திட்டங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் செயல்படுத்தப்படும் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்புதிட்டம், தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் வழங்கப்படுகிறது. திட்ட தொகையில் 50 சதவீதம் கலெக்டர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமைநிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

 தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவுகணக்கர் நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் (ஆன் லைன்) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு 18 முதல் 65 வரை குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 1 லட்சம் ஆகும். தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை படியிறக்கம் செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

 விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ் எண், சாதிசான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண், வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் நேர்காணல் நடத்தப்படும். மேலும், திட்டங்களின் விவரங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஒன்று முதல் பத்து வரை உள்ள விவரங்கள் இன்றியமையாதவை. தொலைபேசி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு, விதிவிலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா