×

லாரி மோதி முதியவர் பலி

திருமங்கலம், நவ. 7: திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுப்பிரமணி (63). இவர் நேற்று முன்தினம் இரவு கிழவநேரிக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ்நிலையத்தில் பஸ் ஏறினார். செங்கப்படை விலக்கு அருகே இறங்கி தென்காசி மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்
தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை