×

குழந்தைகளை பணிக்கு அமர்த்திய 2 நிறுவனங்களுக்கு அபராதம்

மதுரை, நவ. 7: மதுரை கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன், மதுரை மண்டல இணை ஆணையர் வேல்முருகன் உத்தரவுப்படி, உதவி ஆணையர் சதீஷ்குமார் (அமலாக்கம்) தலைமையில், துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள், சைல்டுலைன் உறுப்பினர்கள் சார்லஸ், ஜார்ஜ் மற்றும் காவல்துறை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் குமார் நேற்று குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கூட்டாய்வு நடத்தினர்.
இதில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம், விரகனூர் மற்றும் கோழிமேடு பகுதிகளில் உள்ள உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டது. இது தொடர்பாக, மதுரை 10ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாண்டீஸ்வரன் தாக்கல் செய்த வழக்குகளில், இரண்டு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு, மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : companies ,
× RELATED மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி...