×

சீனாவில் சர்வதேச திறன் போட்டி விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்


மதுரை, நவ. 7: சீனாவில் 2021 செப்டம்பரில் சர்வதேச திறன் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசியாகும். இது குறித்து கலெக்டர் வினய் கூறியிருப்பதாவது: சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பரில் சர்வதேச திறன் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க முதற்கட்டமாக மாவட்ட அளவிலான திறன்போட்டி நடத்தப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் வரும் 2020 ஜனவரி 5 முதல் 15ம் ேததி வரை திறன்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் 6 துறைகளில் உள்ள 47 வகையான தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்தொழில் திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் வாலிபர்கள் வரும் 25ம் தேதிக்குள் https;//worldskillindia.co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவர்கள் (இருபாலரும்), தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், குறுகிய கால மற்றும் நீண்டகால திறன் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள், போட்டியில் பங்கேற்க 1.1.1999க்கு பிறகு பிறந்தவர்கள இருக்க வேண்டும்.மேலும் விவரம் தேவைப்படுவோர் உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஐடிஐ மாணவர்கள் விடுதி வளாகம், அழகர்கோவில் ரோடு, மூன்றுமாவடி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 9842197566, 9442376775, 9843985545 மற்றும் 0452-2560093 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : China ,International Skills Competition ,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...