×

திண்டுக்கல்லில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல்லில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம் நவ.10ல் நடத்தப்படவுள்ளது.21ம் நூற்றாண்டில் உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் உடல்பருமன் நோய் வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, இதயநோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சில வகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. தற்போது குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. இப்போது இந்த அறுவைசிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் அறுவைசிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு உலக புகழ்பெற்ற சென்னை மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை நம் திண்டுக்கல்லில் ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட், மெங்கில்ஸ் ரோடு, நாகல் நகர், திண்டுக்கல். 10.11.2019 ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு சிறப்பு உடல்பருமன் அறுவைசிகிச்சை ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் சிறப்பு உடல் பருமன் அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ் மற்றும் டாக்டர் சரவணக்குமார் அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில் கலந்துகொண்டு அதிக உடல் எடையால் குறட்டை, மூட்டுவலி, மலட்டுத்தன்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடுவீர்.

Tags : Free Obesity Awareness Camp ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் எல்லைப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு