×

நத்தம், செந்துறையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

நத்தம், நவ. 7: நத்தத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 6, 7, 8, 14 வார்டு பகுதிகளில் நிலவேம்பு கசாயம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வீடு வீடாக விநியோகம் செய்தனர். அப்போது ஒலிபெருக்கி வாயிலாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பற்றியும், அவற்றின் உற்பத்தியை தடுப்பது குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து கசாயத்தை வாங்கி அவற்றை வயதின் அளவிற்கு தகுந்தவாறு பருகினர்.இதேபோல் செந்துறை பஸ்நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிலாலியா உலமா பேரவையும் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சஞ்சய்ராம் தலைமை தாங்கினார். கம்பம் பிலாலியா அரபிக்கல்லூரியை சேர்ந்த தாரிக் அஹமது, பேராசிரியர் முஹம்மது அர்சத் முன்னிலை வகித்தனர். முகாமில் டெங்கு காய்ச்சல் குறித்தும், அது வராமல் தடுப்பது பற்றியும் சித்தா மருத்துவர் லட்சுமி பிரியா விளக்கி பேசினார். தொடர்ந்து பெரியூர்பட்டி, ஆலம்பட்டி, சொறிப்பாறைப்பட்டி பகுதியிலும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags : Nattam ,Centurion ,
× RELATED நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50...