×

திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த பாஜகவுக்கு கண்டனம்

திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த பாஜகாவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் பாஜக தங்களது வலைத்தளத்தில் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு காவி உடை அணிவித்து வெளியிட்டிருந்தது. உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை இந்துத்துவா என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயற்சிக்கும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் மேட்டுப்பட்டி பாவேந்தர் கல்விச்சோலையில் கடந்த 20 ஆண்டுகளாக நிறுவ முடியாமல் அரசின் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர தலைவர் கார்த்தி, நகர துணை தலைவர்கள், மோகனவள்ளி, ஜெகன், பொருளாளர் வடிவேல், ஒன்றிய தலைவர் நிருபன்பாசு ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் இலக்கிய பேரவை கணேசன் வாழ்த்தி பேசினார். இதில் வள்ளுவர் காவிமயமாக்கும் இந்துத்தூவ முயற்சிகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

Tags : BJP ,Dindigul ,Thiruvalluvar ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்