×

பணி நிரந்தரம் செய்யகோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், நவ. 7:மின் வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1998க்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும். 2008க்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். 2008க்கு பின்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கேங்மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட  மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் மாவட்ட தலைவர் அன்புசெல்வன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Electricity contract workers ,
× RELATED மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்