தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர், நவ.7: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை சார்பில், திருப்பூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வருகிற 8ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செய்தல் ஆகியவற்றிற்காகவும் அன்றைய தினத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பயன்பெறலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட்டமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேற்கண்ட தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.


Tags : Private Sector Placement Camp ,
× RELATED தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்