×

மலை காய்கறிகள் விலை உயர்வு

ஊட்டி, நவ.7: நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகளின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, முள்ளங்கி, முட்டைகோஸ் மற்றும் வெள்ளை பூண்டு உட்பட பல்வேறு காய்கறிகள் பயிரிப்படுகிறது.  தற்ேபாது, பெரும்பாலான விவசாயிகள் எப்போதும் ஒரு சீரான விலை கிடைக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை பயிரிட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், மலைப் பயிர்களுக்கு எப்போதாவதுதான் விலை உச்சத்தை தொடும். அதுவும் ஏதேனும் ஒரு காய்கறிக்கு மட்டுமே இது போன்ற விலை கிடைக்கும். அப்போது, சம்பந்தப்பட்ட காய்கறியை பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைக்கும். சில சமயங்களில் நஷ்டமும் ஏற்படும்.   பல ஆண்டுக்கு பின் இது போன்று ஒரே சமயத்தில் காய்கறிகள் அனைத்திற்கும் விலை உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு(ஊட்டி) கிலோ ஒன்று ரூ.35 வரை ஏலம் போனது. கேரட் ரூ.50 முதல் 60க்கும். பீட்ரூட் கிலோ ஒன்று ரூ.35 முதல் 45க்கும். பீன்ஸ் ரூ.60 முதல் 80க்கும். முள்ளங்கி மற்றும் முட்டைகோஸ் ஆகியவை தலா கிலோ ஒன்று ரூ.20 முதல் 25 வரையிலும் விலை போனது.  இதுதவிர அனைத்து காய்கறிகளுக்கும் கணிசமான விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. எப்போதாவதுதான் இது போன்று அனைத்து காய்கறிகளுக்கும் ஒரே சமயத்தில் விலை உயருவது வழக்கம். பல ஆண்டுக்கு பின் அனைத்து காய்கறிகளுக்கும் விலை உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்