×

அரசு பஸ்சில் அதிக கட்டணம் வசூலிப்பு

குன்னூர்,நவ.7: நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்சில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்து கழகம் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஏதும் இல்லாத நிலையில் அனைத்து பஸ்களும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 349க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு சமீபத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. மேலும், மலைப்பகுதியில் கூடுதலாக 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது. இது மற்ற மாவட்டங்களை கட்டணங்ளை விட நீலகிரியில் அரசு பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கட்டண குறைப்பு செய்தும் மக்களுக்கு எந்த பயனில்லை.

ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில், சாதாரண பேருந்துகளில், குறைந்த பட்சம் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதே வழித்தடத்தில், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, 53 கி.மீ தூரத்திற்கு, ரூ.52 வசூலிக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக, ரூ.11, ரூ.22 என மாறி, மாறி வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.இது குறித்து பயணிகள் நடத்துனரிடம் கேட்டால், அதிகாரிகள் உத்தரவிட்ட கட்டணத்தைதான் வசூலிக்கின்றோம் என்கின்றனர். இதனிடையே, 35 கி.மீ. தூரத்திற்கு நகர பேருந்துகள் இயக்கலாம் என்ற விதிமுறையின் கீழ் கணக்கு காண்பிக்க போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாகப் பயணிகள் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்டத்தில், 70 சதவீத பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தாலும், தற்போது பெரும்பாலான பேருந்துகள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, 80 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்லும் பஸ்களில், குறைந்தபட்சம், 25 கி.மீ. தூரத்திற்கு ஒரு ஸ்டேஜ் என இருந்தால் மட்டுமே எக்ஸ்பிரஸ் பஸ் இயக்க வேண்டும். ஆனால், இந்த விதிகள் நீலகிரி மாவட்டத்தில் பின்பற்றப்படுவதில்லை.  நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டண தொகையை மறைத்து, ஆர்.டி.ஐ.யில் தகவல் கொடுத்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நீலகிரியில், இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களிலும், சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்க, வட்டார போக்குவரத்து அலுவலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக செயல்பட்டு எக்ஸ்பிரஸ் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இ துெதாடர்பாக, குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்து கழகம் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...