×

நீட் தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வர தாமதம் பெற்றோர் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம், படப்பை, நல்லூர், குண்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். மேலும் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த கீழ் படப்பை ப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 813 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். காலை 11 மணிக்கு நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்களை அலுவலகத்தில் அனுமதித்தனர். இந்நிலையில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. 5 மணிக்கு வெளியே வர வேண்டிய மாணவர்கள் அரை மணி நேரமாக வெளியே வரவில்லை. இதனால் வெளியில் காத்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பெற்றோர்களிடன் சமாதானம் பேசி கலை செய்தனர். பின்னர் அதிகாரியிடம் விசாரித்ததில், நீட் தேர்வு அடையாள அட்டையில் போஸ்ட் கார்ட் அளவு கொண்ட புகைப்படம் ஒட்டாமல்  இருந்த 47 மாணவர்களை வெளியே அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது. பின்னர் 47 மாணவர்களின் அடையாள அட்டையை கொண்டு வந்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பிறகு அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post நீட் தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வர தாமதம் பெற்றோர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : NEET ,Sriperumbudur ,Chungwarchatram ,Patappai ,Nallur ,Kunnam ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED ராஜிவ் காந்தியுடன் உயிர்நீத்த...