×

அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது

ஈரோடு, நவ. 7: அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என நேசனல் விமன்ஸ் ஃபிரண்ட் (என்டபிள்யுஎப்) தேசிய செயலாளர் சர்மிளா பானு கூறினார். ஈரோட்டில் என்டபிள்யுஎப் சார்பில்  இஸ்லாமிய வாழ்வு நமது பெருமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது.  மாவட்ட தலைவர் ஷகிலாபானு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசினாபானு  வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் சர்மிளா பானு கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமின்றி தலித் பெண்களுக்கும், தலித்துகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. இதை விழிப்புணர்வு மூலம் மாற்றி வருகிறோம். இஸ்லாமிய சட்ட, திட்டங்கள் தெரியாமல் சிலர் தவறாக செயல்படுகிறார்கள். அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அயோத்தி பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு எங்களது தேசிய அளவிலான கமிட்டி கூடி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் யாஸ்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசிதா, ஜரினாபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Supreme Court ,Ayodhya ,
× RELATED 50% இட ஒதுக்கீடு விவகாரம்: ஐகோர்ட்...