×

பன்னாட்டு கருத்தரங்கிற்கு ஆய்வு கட்டுரை நவ.20க்குள் அனுப்பலாம்

ஈரோடு, நவ. 7: பன்னாட்டு கருத்தரங்கிற்கு ஆய்வு கட்டுரை நவ.20க்குள் அனுப்பலாம் என சிக்கய்யநாயக்கர் கல்லூரி தமிழ்துறை தலைவரும், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளருமான கமலக்கண்ணன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மலேசியா உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், காவ்யா பதிப்பகம், ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் திராவிடம் வளர்த்த தமிழ் என்ற பெயரில் பன்னாட்டு கருத்தரங்கம் வரும் டிச.14ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற உள்ளது.  கருத்தரங்கில், உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் குமரன், தஞ்சை தமிழ் பல்கலை கழக பேராசிரியர் மற்றும் தலைவர் குறிஞ்சிவேந்தன், வேளாளர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.இதில், திராவிட இயக்கத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது. இந்த கட்டுரைகள் திராவிட இயக்க முன்னோடிகளின் ஆக்கங்கள், கவிதைகள், வாழ்வியல் விழுமியங்கள், நாவல்கள், திரைப்படங்கள், சொற்பொழிவுகள், சிறார் இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகள், இயக்க இதழ்கள், கடித இலக்கியங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் அமையலாம். கட்டுரைகளை வரும் 20ம் தேதிக்குள் சதீஷ்குமார், தமிழ்த்துறை உதவி பேராசியர், சிக்கய்யநாயக்கர் கல்லூரி, ஈரோடு-638004 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்கு ஒருங்கிணைப்புக்குழு இணை பேராசிரியர் அங்கயற்கண்ணி, உதவி பேராசிரியர்கள் சிவமணி, ஜோதிமணி, இராக்கு, மணிகண்டன், விஸ்வநாதன், சதீஷ்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : seminar ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்