×

மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து 18ல் நடக்கும் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்பு

ஈரோடு, நவ.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம், ஈரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமை தாங்கினார். இதில், மாநில துணைச்செயலாளரும், திருப்பூர் எம்பி.யுமான சுப்பராயன், மாநில பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவை இரண்டாக பிரித்து கோபியை தலைமையிடமாக கொண்டு ஈரோடு வடக்கு மாவட்டமாகவும், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ஈரோடு தெற்கு மாவட்டமாகவும் பிரிக்க வேண்டும்.கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக மாதேஸ்வரன், நிர்வாக குழு உறுப்பினர்களாக மோகன், வெங்கடாசலம், பாலதண்டாயுதம், மோகன்குமார், சுந்தரம், கந்தசாமி, பாலமுருகன், ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோரையும், மாவட்ட நிர்வாக குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக பரமேஸ்வரன் ஆகியோரையும் நியமிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் வரும் 7ம் தேதி முதல் 9ம்தேதி வரை நடைபெற உள்ள மேற்கு மாவட்டங்களின் கட்சி முன்னணி ஊழியர் பயிற்சி முகாமில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, வரும் 18ம் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Tags : Communist ,Indian ,picketing ,tower ,
× RELATED முற்றுகை போராட்டம்