×

அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி

அறந்தாங்கி, நவ.7: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளரும், பெருங்காடு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் நாகூர்கனி முன்னிலை வகிததார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இப்போட்டியின் நடுவர்களாக மேலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஃபஹிம்முநிஷா மற்றும் ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியை நதியா ஆகியோர் செயல்பட்டனர். தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் போட்டியை துவக்கி வைத்தார். நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

நடுநிலை அளவில் நடந்த வினாடி வினாவில் மேல்மங்கலம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி முதலிடமும், அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும், கொடிவயல் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன. உயர்நிலை அளவில் அளவில் பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடமும், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. மேல்நிலை அளவில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முதலிடம் பெற்றது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பெற்ற பள்ளிகள் வருகிற 9ம்தேதி மாவட்ட அளவில் புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை

கைவிடப்பட்ட கிணறுகள், களிமண், மணல், சிறு கற்ககள் மற்றும் உரிய பிற பொருட்களை கொண்டு தரைமட்ட அளவிற்கு மூடப்படவேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எண்கு தகடுகளாலும் ஒன்றோடு ஒன்று இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியை கொண்டோ அல்லது இரும்பு குழாயின் மேற்புறத்தை உறுதியான மூடியை கொண்டு மூடி திருகு மரையாணிகளை கொண்டு குழாயுடன் இணைத்து மூட வேண்டும்.

Tags : School Students ,Science Movement ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்