×

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் ஊரை சுற்றும் பட்டதாரி இளைஞர்கள் வருமானமின்றி வறுமையில் ஏழை குடும்பங்கள்

புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காததால் கிராமங்களில் உள்ள மந்தையில் அமர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்களுக்கு போதிய வருமானம் இன்றி பெற்றோர்கள் சிரமத்துடன் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துகளில் பல ஆயிரம் குக்கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு குக்கிராமங்களிலும் சுமார் 20 முதல் 30 இளைஞர்கள் பொறியல், ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட தொழிற்கல்விகள் மற்றும் அதன் சார்ந்த படிபுகள் படித்துள்ளனர். இதபோல் கலை அறிவியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்துள்ளனர். இப்படி அனைத்து குக்கிராமங்களிலும் படித்த இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்கள் படிப்பு முடித்தவுடன் தெரிந்தவர்கள், நண்பர்கள், படிக்கும்போது மூத்த மாணவர்கள், உறவினர்கள் உதவியுடன் சென்னை, பெங்களூர், கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அப்போது கிடைத்த வேலையை குறைந்த ஊதியத்திற்கு பார்க்கின்றனர். சில நாட்களிலேயே வேலை சரியில்லை, போதிய ஊதியம் இல்லை என்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிவிடுகின்றனர். இப்படி திரும்பி வருபவர்கள் மீண்டும் வேலை தேடி வெளியூர் செல்வதில்லை. ஒரு சிலர் மட்டும் கஷ்டத்தோடு கஷ்டமாக வேலை தேடி கிடைத்த வேலையை செய்து கொண்டு கிடைத்த ஊதியத்தை வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். வேலை தேடி வெளியூர் சென்று பிறகு மீண்டும் சொந்த ஊர்திரும்பும் இளைஞர்கள் எங்கும் செல்வதில்லை.

ஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞர்கள், மக்கள் திரளும் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தை ஒரு சில ஊர்களில் மந்தை, சாவடி என பல பெயர்கள் வைத்து அழைத்துகொள்வார்கள். தினமும் காலை வீட்டை விடடும் புறப்படும் இளைஞர்கள் மந்தைக்கு வந்துவிடுகின்றனர். வரும்போதே அவர்களின் நண்பர்களை தொடர்புகொண்டு நான் அங்கே வருகிறேன் நீயும் வந்துவிடு என்று அழைத்து மந்தையில் அமர்ந்துகொண்டு வெட்டி பேச்சு பேசுகின்றனர். அப்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிகின்றனர். சில கிராமங்களில் தாயம் விளையாட்டு, ரம்பி விளையாட்டு என பல விளையாட்டில் இளைர்கள் மூழ்கிவிடுகின்றனர். இதபோல் மாலை வரை பொழுதை கழிக்கும் இளைஞர்கள் இரவு நேரத்தில் மது அறுந்த தொடங்குகின்றனர். இதனால் இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகுந்த மன வேதனை அடைக்கின்றனர். சில குடும்பத்தில் தங்கள் பிள்ளைகள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை மந்தைக்கு செல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கும் அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் படித்த படிப்புக்கு வேலையின்மையே காரணம் என்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இளைஞர்கள் வேண்டுமென்றே ஊர் சுற்றிவருகின்றனர். நகர் பகுதியில் பல வேலைகள் கிடைக்கிறது. இவர்கள் கவுரவம் பார்த்துக்கொண்டு யாரிடமும் பனிந்து நடக்காமல் வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலையின்றி பல பிரச்னைகளை சந்தித்து வாழ்கையை முழுமையடையாமல் பாதைமாறி சென்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மந்தையில் அமர்ந்துகொண்டு வெட்டி பேச்சு பேசுகின்றனர். அப்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிகின்றனர். சில கிராமங்களில் தாயம் விளையாட்டு, ரம்பி விளையாட்டு என பல விளையாட்டில் இளைர்கள் மூழ்கிவிடுகின்றனர். இதபோல் மாலை வரை பொழுதை கழிக்கும் இளைஞர்கள் இரவு நேரத்தில் மது அறுந்த தொடங்குகின்றனர்.

Tags : youths ,Pudukkottai district ,town ,families ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்