வடுவூர் அருகே தென்பாதியில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரம்

மன்னார்குடி, நவ.7: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே தென்பாதி, கொண்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வடுவூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பொது சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையில் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் 5 பேர்கள், தூய்மை காவலர்கள் 6 பேர்கள் கொண்ட குழுவினர் கடந்த 2 தினங்களாக பல்வேறு டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, காய்ச்சல்களுக்கான காரணங்கள் கண்ட றிதல் மாற்று தூய்மை படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கிராமங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கிடந்த தேவையற்ற பொருட்களை அகற்றினர். கிராமபுறத்தை எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்கள், மாணவ மாணவியர்களுக்கு துண்டு பிரசுரங்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

Related Stories:

>