×

தூத்துக்குடியில் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் நீதித்துறை ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை, நவ.7: நாகை கோர்ட் வளாகத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் தூத்துக்குடியில் சுருக்கெழுத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற சுருக்கெழுத்தரை தாக்கியதை கண்டித்து தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நாகை கோர்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் புகழேந்தி வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் யோகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடியில் நீதிமன்ற சுருக்கெழுத்தர் சாரதி தூத்துக்குடி நீதித்துறை நடுவரால் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Tags : incident ,Judicial Employees Union ,Thoothukudi ,
× RELATED டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்ட...