×

அசோலா தயாரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

நீடாமங்கலம், நவ.6: நீடாமங்கலம் அருகில் உள்ள காஞ்சிகுடிகாடு கிராமத்தில் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் அசோலா தயாரிக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் அளித்தனர்.அசோலா வளர்ப்பதற்கு உகந்த இடங்கள் மர நிழலில் (நேரடி சூரிய ஒளிஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கு மேல் இருக்க கூடாது) அசோலா தயாரிக்கும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.இடத்தின் அளவு 6க்கு 3 இருக்க வேண்டும். களை செடிகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக இருக்க வேண்டும்.அசோலா வளர்க்கும் முறை: செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும். அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும். சில்பாலின் பாயின் மீது 15 கிலோ மணலை சம அளவில் பரப்பி விட வேண்டும். தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரை இருக்க வேண்டும். புதிய சாணம் 2 கிலோ (அ) 30 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 1000 கிராமம் சுத்தமான அசோலா விதைகளை தண்ணீரில் போட வேண்டும்.

அசோலா பராமறிக்கும் முறை:தினந்தோறும் குழியில் அசோலாவினை கலக்கி விட வேண்டும. தண்ணீரின் அளவு 10 செ,மீ குறையாமல் இருக்க வேண்டும்.5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் (அ) 10 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மணலை வெளியேற்ற வேண்டும் பிறகு சுத்தமான சலித்த மணலை இட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி புதிதாக இட வேண்டும். என அசோலா தயாரிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கமளித்தனர்.


Tags : Make Azola ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து