×

மாணவர்கள் பங்கேற்பு டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

தரங்கம்பாடி, நவ.7: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரமும், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரமும், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்கத்தின் வட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணை தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினார். அதை தொடர்ந்து பிள்ளை பெருமாநல்லூர், திருமெய்ஞானம், ஆணைகோயில், பூதனூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், தரங்கம்பாடி, பொறையார், ஆக்கூர் முக்கூட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களுக்கு ஜனநாயக வாலிப சங்கத்தின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், வட்ட பொருளாளர் சாமிதுரை, துணை செயலாளர் பவுல் சத்தியராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆக்கூரில் கிராம பொதுநல சங்கத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்வரசு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்கார்த்திக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினார். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED 230 மாணவ, மாணவிகள் பங்கேற்பு