தூர்வாரப்பட்ட வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது மற்றொருவருக்கு வலை

மயிலாடுதுறை, நவ. 7: மயிலாடுதுறை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் கடந்த 6ம் தேதி மயிலாடுதுறையிலிருந்து சித்தமல்லி அரசு நகரபேருந்தினை ஓட்டிச் சென்றார். அப்போது கொண்டல் சாலையில் பைக் ஒன்றை முந்திசென்றதால் பைக்கில் சென்ற 3 பேர் பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் குமரேசனையும், நடத்துனர் பூவராகவனையும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மணல்மேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய வில்லியநல்லூர் கண்டியூர் கலியபெருமாள் மகன் சிவக்குமார்(49) என்பவரை கைது செய்து காவலில் அடைத்தனர். மேலும் அவரது மகன் சுப்பிரமணியனை தேடிவருகின்றனர்.

Related Stories:

>