மயிலாடுதுறை அருகே சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே

சீர்காழி, நவ.7: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தூர்வாரப்பட்ட முடவன் வாய்க்காலில் மீண்டும் ஆகாயத்தாமரை மண்டியுள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் முடவன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகாலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 350 ஏக்கரில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்க்கால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை மண்டிக்கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வது தடைபடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால் தண்ணீரை கால்நடைகளுக்குகூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முடவன் வாய்க்காலில் பல்வேறு பகுதியிலிருந்து கழிவுகள் தண்ணீரில் அடித்து வரும்போது ஆகாயத்தாமரைகளால் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் விவசாயிகள் நலன்கருதி முடவன் வாய்க்காலில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>