×

சம்பா நடவு பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரம்

சீர்காழி, நவ.7: சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைபெய்யாததால் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், பழையபாளையம், வடகால், எடமணல், அரசூர், எருக்கூர், கொண்டல், பனங்காட்டான்குடி, வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம், வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, புதுத்துறை, திருவெண்காடு, மங்கைமடம், கீழச்சாலை, மருவத்தூர், அட்டகுளம் உள்ளிட்ட சீர்காழி தாலுகா அளவில்இந்த ஆண்டு விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகளை தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்ததால் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்யவில்லை. இருப்பதால் விவசாயிகள் அதிக இடங்களில் உழவு செய்து நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

சில இடங்களில் விவசாயிகள் நடுவு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் விவசாயிகள் நடவு செய்த நெற் பயிர்களில் களையெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது சில இடங்களில் பயிர்களுக்கு யூரியா தெளிக்கும் பணிகளும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் விவசாய பணிகள் முற்றிலும் முடிந்துவிடும். எனவே மழை பெய்யாமல் இருக்க வருண பகவான் தான் பொறுத்துக்கொள்ள வேண்டுமென விவசாயிகள் தெரிவிக்கின்றன.

Tags : Samba ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை