×

கீரக்களூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய கழிப்பறை திறப்பு விழா

திருத்துறைப்பூண்டி, நவ.7: திருத்துறைப்பூண்டியில் உள்ள கீரக்களூர் அரசு உதவிபெறும் பள்ளியில் சென்னையை சேர்ந்த பூமி தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கழிப்பறை திறப்பு விழா நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைராஜ் மற்றும் கிராமக் கல்வி குழு தலைவர் பன்னீர்செல்வம் கட்டிடத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியர் அருண்குமார், பள்ளி நிர்வாகி தமிழ்ச்செல்வன், ஆசிரியர் காளிதாஸ், ஆசிரியர் அழகரசன் மற்றும் பொதுமக்கள், ஆலத்தம்பாடியை சேர்ந்த தன்னார்வலர்கள் பிரகதீஸ்வரன் மற்றும் பார்த்தீபனுக்கும், பூமி தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.Tags : New Toilet Opening Ceremony ,
× RELATED அமைச்சர் காமராஜ் பேட்டி...