அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

மன்னார்குடி, நவ.7: மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியின் உணவு, குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.பின்னர் மாணவிகளிடம் பேசிய மாவட்ட கலெக்டர் ஆனந்த், கல்லூரி காலங் களில் நன்கு பயில வேண்டும். அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் குறித்து அறி விப்புகளை தெரிந்து கொண்டு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். மேலும் தினசரி செய்திதாள்களை தொடர்ந்து படித்து பழக வேண்டும். பட்டப்படிப்பில் முயற்சி செய்து நன்கு பயின்றால் வாழ்க்கையில் உயரலாம் என அறிவுரை கூறினார். மேலும் மாணவிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்ட றிந்தார்.

தொடர்ந்து மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களிடமும் மாவட்ட கலெக்டர் அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்து, விடுதி சமயலறை தூய்மை யாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.ஆய்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூசனகுமார், ஆர்டிஓ புன்னியகோட்டி, தாசில்தார் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.சிமென்ட் காரைகள் எப்போது பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அதை சரிசெய்து தரவேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ட்டிருந்தது.


Tags : inspection ,Adiravidar College ,student hostel ,
× RELATED பொங்கலன்று மத்திய அரசு அலுவலகங்களில்...