×

வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது

வேலூர், நவ.7: வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வேலூர் மத்திய சிறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அறையில் இருந்து கடந்த 18ம் தேதி ஸ்மார்ட்போன், சிம்கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றை சிறைத்துறை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போன், சிம்கார்டு, மெமரி கார்டு ஆகியன ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அங்கு, சிம் கார்டில் இருந்து யார்? யாரிடம் பேசப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் மெமரி கார்டில் ஆய்வு செய்த பிறகு அதன் அறிக்கை வைத்து குற்றப்பத்தரிக்கை தயாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : room ,Murugan ,Vellore Central Prison ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...