×

பள்ளிப்பட்டு அருகே ஜங்காருபள்ளி ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலை

பள்ளிப்பட்டு, நவ. 7: பள்ளிப்பட்டு அடுத்த ஜங்காருபள்ளி ஊராட்சிக்குட்பட்ட 3வது தெருவில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெரு நீண்ட காலமாக மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால், மழைக் காலங்களில் இந்த தெருவின் சாலை சேறும் சகதியுமாக மாறி, குளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் அங்குள்ள வீடுகளில் இருந்து சாலைகளில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவு நீருடன் தற்போது செய்த மழைநீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கிருமிகள் கடிப்பதால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சேறு சகதியில் சிக்கி கீழே விழுந்து அடிபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் கூறியும், இங்கு தார் சாலை அமைக்க இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கிராம மண் சாலையை விரைவில் தரமான தார் சாலையமாக மாற்றி சீரமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Jankarupalli ,panchayat road ,Pallipattu ,
× RELATED அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம்