×

உரிய ஆவணம் இல்லாததால் 70 கிலோ வெள்ளி 4 லட்சம் பறிமுதல்

அண்ணாநகர்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் (34), கார்த்திக் (27), மணிகண்டன் (24) ஆகிய மூவரும் சென்னை வந்துள்ளனர். நேற்று காலை மூவரும் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் என்பவரின் குடோனில் இருந்து 70 கிலோ வெள்ளி கொலுசு, வெள்ளி கட்டி, 4 லட்சம் பணம் வாங்கி கொண்டு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சேலம் செல்ல சவுகார்பேட்டையில் இருந்து ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வாகனத்தில் வந்த உதவி ஆய்வாளர் ஸ்ரீராம் சந்தேகத்தின் பெயரில் ஆட்டோவை சோதனை செய்தார். உரிய ஆவணமின்றி வைத்திருந்த 70 கிலோ வெள்ளி கொலுசு, வெள்ளி கட்டி, 4 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்