×

பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நடைபாதை வளாகத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டிபஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ₹38 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளில் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும்  அழகுப்படுத்தும் வகைகளில் பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது. இதைத்தவிர்த் சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி  ராஜ் சொரூபல், ஸ்மார்ட் சிட்டி மண்டல அலுவலர் பாபு, கோடம்பாக்கம் மண்டல அலுவலர் பரந்தாமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தார். இந்த ஆய்வின் போது நடைபாதை வளாகத்தில் என்ெனன்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன? பணிகள் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை அமைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திட்டம் என்பதால் இதை திறந்து வைத்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : commissioner inspection ,Bondi Bazaar ,
× RELATED வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையே...