×

கொசஸ்தலை ஆற்றங்கரை மாந்தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை : மர்ம ஆசாமிகளுக்கு வலை

புழல் : சோழவரம் அடுத்த காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சோழவரம் அடுத்த காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகே ஒரு மாந்தோப்பில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக சோழவரம் போலீசாருக்கு  நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாந்தோப்பில் ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வாலிபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சோழவரம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் காரனோடை, சண்முகா நகரை சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜேஷ் (எ) குள்ள ராஜேஷ் (24) என்பதும், அவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது.
எனவே ராஜேஷை முன்விரோதம் காரணமாக யாராவது கடத்தி கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் தகராறு காரணமாக மர்ம ஆசாமிகள் கடத்தி வந்து வெட்டி சாய்த்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,Mantorp ,Kosasthalai River ,
× RELATED தலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத...