சேலம் கூட்ஸ் செட்டிற்கு சென்னையில் இருந்து 2,300 டன் உரம் வந்தது

சேலம், நவ.6: சேலம் கூட்ஸ் செட்டிற்கு சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் 2,300 டன் உரம் வந்திறங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாட்டிற்காக சேலம் கூட்ஸ் செட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், உரம், கோழித்தீவனம் போன்றவையும், ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடும் சரக்கு ரயிலில் வந்திறங்கி வருகிறது. இதன்படி நேற்று, சென்னை துறைமுகத்தில் இருந்து 35 வேகன் கொண்ட சரக்கு ரயிலில் 2,300 டன் உரம் வந்தது.

இந்த உரத்ைத, சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர். யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட இந்த உரத்தை தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது