×

மேட்டூர் ஐடிஐ.,யில் ெதாகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி

சேலம், நவ.6: மேட்டூர் ஐடிஐ.,யில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள தற்காலிக பணிக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. அங்கு பொது மற்றும் தனியார் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள கம்மியர் மற்றும் குளிர்சாதனம் தட்பவெப்பநிலை கட்டுபடுத்துதல் பிரிவிற்கு ₹20 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில தற்காலிகமாக பணிபுரிய ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்வர்கள் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்திருப்பதுடன், 2 வருடம் முன் அனுபவம் ெபற்றிருக்க வேண்டும். மேலும், சிஐடிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 வயதிலிருந்து 32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம் செய்தவர்கள், போரில் உயிரிழந்தவரின் மனைவி, மகன், ஆதரவற்ற விதவை, அரசுக்கு நிலம் வழங்கியவர்களின் நேரடி வாரிசு, முன்னாள் ராணுவத்தினர், அவர்களின் நேரடி வாரிசு, மொழிப்போர் தியாகிகளின் நேரடி வாரிசு போன்றவற்றிற்கான தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி பெற்றிருப்பவர்கள், பெயர், கல்வித்தகுதி, இனம் மற்றும் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அணை-636 452 என்ற முகவரிக்கு வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, அரசு ஐடிஐயை தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் (பொ) லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Mettur IDI ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது