×

சேலம்-சங்ககிரி மெயின்ரோட்டில்6 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்

சேலம், நவ.6: சேலம்-சங்ககிரி மெயின்ரோட்டில் பைப்லைன் உடைப்பு காரணமாக, 6 மாதமாக சாலையில் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சியின் 52வது வார்டுக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு, அங்கு முருகன் கோயில் அருகே உள்ள நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு, சேலம்-சங்ககிரி ெமயின்ரோட்டில் சாலை புதுப்பிக்கப்பட்டது. அப்போது, நீர்தேக்க தொட்டியிலிருந்து வீதிகளுக்கு செல்லும் பைப்லைனில், அரசு பள்ளிக்கு எதிரே உடைப்பு ஏற்பட்டது. இதனால், நாள்தோறும் குடிநீர் விநியோகிக்கும் போதெல்லாம், அந்த உடைப்பிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. கடந்த 6 மாதத்தில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். எனவே, பலநேரங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Salem-Sankagiri ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி