×

பொத்தனூர் பேரூராட்சியில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி

பரமத்திவேலூர், நவ.6: பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரூராட்சி  செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் துப்புரவு பணியாளர் குணசேகரன்,  மற்றும் அலுவலகப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டு,  குழுக்களாக பிரிந்து பேரூராட்சியில் வார்டு வார்டாக சென்று டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள தரை மட்ட தொட்டிகள்,  மேல்நிலை தொட்டிகளில் கொசுப்புழுக்களை அழிக்கு அபேட்  மருந்து  ஊற்றினர்.  குளோரின் மருந்து பொடிகளை போட்டினர்.

குடியிருப்பு பகுதிகளில் உடைந்த  பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, தேவையற்ற பொருட்கள்,  டீ கப், உரல்கள், மற்றும் பழைய டயர்களை அகற்றியவர்கள், கொசுப்புகை மருந்து  அடித்தனர்.      மேலும் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரம் குறித்த  விழிப்புணர்வு மற்றும் டெங்குவை ஒழிக்கும் முறைகள் குறித்து ஆலோசனைகளும்,  வீட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களின் நீண்ட  நாட்களாக உள்ள குடிநீரில், கொசுப்புழுக்கள் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது  குறித்த அறிவுகளை வழங்கினர்.

Tags :
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு