×

சோளக்காடு சந்தையில் பூட்டிக்கிடக்கும் நவீன கழிப்பிடம்

சேந்தமங்கலம், நவ. 6: நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று கொல்லிமலை. காரவள்ளி அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். இங்கு அன்னாசி, பலாப்பழம், மாம்பழம் , கமலா ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்கள் பயிர் செய்யப்படுகிறது. இதனை கொல்லிமலையின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தலைச்சுமைகளாக சோளக்காடு சந்தைக்கு  நேரடியாக கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வசதிக்காக, வாழவந்திநாடு ஊராட்சி சார்பில் கடந்த 2012-13 ம் ஆண்டு ₹4.68 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பயன்பாட்டில் இருந்து வந்த சுகாதார வளாகம் திடீரென மூடப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே உள்ளது. சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கழிப்பிட வசதி இல்லாததால், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகினறனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், சோளக்காடு சந்தையில் பூட்டிக்கிடக்கும் நவீன சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு