×

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வாணி பள்ளி சாம்பியன்
பள்ளிபாளையம்,அக்.6: நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, வெப்படை அடுத்த உப்புபாளையம் ஸ்ரீவாணி இன்டர்நேசனல் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் புஷ்பலதா வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் பிரகாஷ் போட்டியை துவக்கி வைத்து பேசினார். பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.

இதில்10 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் ஸ்ரீவாணி இன்டர்நேசனல் பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தலைவர் அருள்பிரகாஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags : Vani School Champion in Roller Skating Competition ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி