×

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

நாமக்கல், நவ.6: காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தில் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மின்சார வாரியத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மின்துறை அமைச்சர் அறிவித்தபடி தினக்கூலியாக ₹380 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு மண்டல செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 127 பேரையும் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Electricity contract workers ,
× RELATED மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நவ.2ல் காத்திருப்பு போராட்டம்