×

விவசாயிகளுக்கு வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.6: கிருஷ்ணகிரி மாவட்டம் சாமாண்டப்பட்டி கிராம பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு, வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மேட்பட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு பயிலும் பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் கிருஷ்ணகிரியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி விரிவாக்க மைய தொழில்நுட்ப சேவை மையத்தின் கீழ் சாமாண்டப்பட்டி கிராம பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கிராமப்புற வளர்ச்சியில் வெண்பட்டு வளர்ப்பின் அவசியம், முக்கியத்துவம் குறித்து பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எடுத்துரைக்கப்பட்டது. வெண்பட்டு வளர்ப்புக்கான மனை அமைத்தல், வெண்பட்டுப்புழு வளர்ப்பின் போது மனையை கிருமி நீக்கம் செய்தல், பட்டுப்புழு வளர்ப்புக் கழிவுகளை உரமாக மாற்றுதல், வேர் அழுகல் நோயினை சரிசெய்ய ராட்பிக்ஸ், ஊசி ஈயை கட்டுப்படுத்துதல் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மல்பெரி வளர்ப்பிற்கான உர மேலாண்மை, உயிரி உரப்பயன்பாடு, மழைக்காலத்தில் வெண்பட்டுப்புழு வளர்ப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி ஆராய்ச்சி விரிவாக்க மையம் ஜான்ஸி லட்சுமி(விஞ்ஞானி டி), சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் தாஹீரா பீவி (விஞ்ஞானி டி), கேவிகே வேளாண் பொறியாளர் முகமதுஇஸ்மாயில், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணன், தொழில்நுட்ப உதவியாளர் ரங்கநாயகி, உதவி ஆய்வாளர் அழகேசன், இளநிலை ஆய்வாளர்கள் ஜெயராஜ், கவிதா, மேட்டுப்பாளையம் பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் அமுதா, டெபோராவின்ஸி, கவுசல்யா, ஐஸ்வர்யா, மஞ்சு, ரூபதர்ஷினி, சனோபர், சிவரஞ்சனி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்