×

சித்தேரி சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல்



அரூர், நவ.6: அரூர் அருகே சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் அருகே சித்தேரி ஊராட்சியில் 63 கிராமங்கள் உள்ளது. முற்றிலும் மலைவாழ் மக்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதி மக்கள், சித்தேரியில் ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் பகலில் மட்டுமே மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.இந்நிலையில் இரவு ேநரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், உடல் நிலை பாதிக்கப்படுவர்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும் பணிபுரியும் மருத்துவர்கள் இருவரும் ஆண்களாக உள்ளனர். இதனால் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் மருத்துவரை நியமிப்பதுடன், இரவு நேரத்திலும் மருத்துவர்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,health center ,Siddheri ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...