×

மாநில சதுரங்க போட்டியில் தானப்ப கவுண்டர் பள்ளி மாணவி சாதனை


காரிமங்கலம், நவ.6: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி கோமதி, ஈரோடில் மாநில அளவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவி, மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று மாணவி கோமதியை, தர்மபுரியில் நடந்த தடகள விளையாட்டு போட்டியில், பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் பள்ளி சார்பில், மெட்ரிக் பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன், நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், இயக்குனர்கள் ரவிசங்கர், சரவணகுமார், பள்ளி முதல்வர் ரகீப் அகமது, நிர்வாக அலுவலர் தனபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED மாநில செஸ் போட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு