×

சாக்கடை நிரம்பி வழிவதால் துர்நாற்றம் வர்ணீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், நவ.6: அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வர்ணீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டு பழமையான ஸ்ரீவர்ணீஸ்வரர் கோயில் உள்ளது. பழங்கால ஓலைச்சுவடிகளிலும் இந்த தல வரலாறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் தீர்த்தமலை, அனுமன்தீர்த்தம், வர்ணதீர்த்தம் குளங்களில் நீராடினால் தீராத தோல் வியாதிகள் அனைத்து தீர்ந்துவிடும் என, அந்த ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகு பெருமை வாய்ந்த வர்ணதீர்த்தம் வர்ணீஸ்வரர் ஆலயத்தில் உள்ள குளம் சாக்கடை நீர் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்கள் மட்டுமின்றி வருட பிறப்பு மற்றும் விழா காலங்களிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். ேகாயில் குளத்திற்கு அருகிலேயே ஓடும் ராஜ கால்வாயில் பெருக்கெடுத்து வரும் சாக்கடை நீர் கோயில் குளத்தில் கலந்து, முழுவதும் கழிவு நீர் நிரம்பி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த கோயில் குளத்தை தூர்வாரி, முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : pond ,Varniswarar Temple ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...