×

மொரப்பூர் அருகே அரசு பஸ் டிரைவர் மர்மச்சாவு

அரூர், நவ.6: மொரப்பூர் அருகே மாயமான அரசு பஸ் டிரைவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(54). அரசு பஸ் டிரைவரான இவர், கடந்த 3ம் தேதி காலை வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் வேலை செய்யும் இடத்திலும், அவரது நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விசாரித்துள்ளனர். அப்போது, மனோகரன் இரவு 8.30 மணிக்கே வீட்டிற்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் மனோகரனை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலை அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மனோகரன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மொரப்பூர் ேபாலீஸ் ஸ்டேஷனுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரை்நத போலீசார், சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து மனோகரன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Government bus driver ,Marmachau ,Morapur ,
× RELATED மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழப்பு