×

விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக சீல் அகற்றம்

விக்கிரவாண்டி, நவ. 6: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூடி சீல்வைத்தனர். கடந்த மாதம் 29ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் மாவட்டத்திலிருந்து திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் நகர அதிமுக செயலாளர் பூர்ணராவ், பாமக சங்கர் ஆகியோர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் விஜயன், விஏஓக்கள் முருகன், உதயகுமார், சண்முகவேலன் மற்றும் உதவியாளர் செந்தில் ஆகியோர் சீலை அகற்றி  அலுவலக சாவியை நகர செயலாளர் பூர்ணராவிடம் ஒப்படைத்தனர். பின்னர்  உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ  முத்தமிழ்செல்வன் பெயர் எழுதி, வெள்ளையடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

Tags : Wickravandi ,MLA ,Office Seal Removal ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ...