×

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு 2 இடங்களில் மக்கள் போராட்டம்

விழுப்புரம், நவ. 6: விழுப்புரத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன்நகர் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதற்கான பணிகளை நேற்று தொடங்கியது. ஜேசிபி இயந்திரங்களுடன் சென்று பள்ளம் தோண்டினர். அப்போது பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி, இப்பகுதியில் செல்போன் டவர்அமைக்கக்கூடாது என வலியுறுத்தினர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளி, அங்கன்வாடி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர்அமைத்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது. அதிகாரிகளும் உரிய அனுமதி வழங்கக்டாது என்று வலியுறுத்தினர்.

இதே போல் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரியகுடியிருப்புக்கு அருகே மகாதேவன்நகர் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு டவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியது. பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்து போராட்டம் நடத்தியதால் கைவிடப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் அதே இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் டவர்அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்ட முயற்சித்தனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்துசென்று பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினார்கள். அதே போல் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நகர காவல்நிலைய போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.

Tags : places ,cell tower ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...